Saturday, January 21, 2012

வரதட்சணை வேண்டாம் என்று ஒரு இறை நேசர் தன் மனைவியிடம்

அல்லாஹ் இந்த தம்பதியினருக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
நாங்களும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று மேடையில் மனமார உறுதி பூண்டவர்கள் நிறைய சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்., அப்படிப்பட்ட இறை நேசர்களை அல்லாஹ் ஈருலகிலும் பிரகாசமான வாழ்க்கையை அமைத்து தருவான்.
நமதூரில் வரதட்சணை மேலும் மேலும் அதிகரிக்க ஒரு சில ரணம் உள்ளது.
1 .  வரதட்சணை வேண்டாம் என்று ஒரு இறை நேசர் தன் மனைவியிடம் சொல்வாரானால்....."எங்க வாப்பா உம்மா எனக்கு சீதனத்த (வீடு, நகை)  நீங்க ஏன் வானாங்குறீங்க.
2 . ரெண்டாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருக்கும் பெண் பிள்ளையை காட்டி (நில புரோக்கர்) ஏன்மா இன்னமுமா உங்க மகளுக்கு வீடு கீடு கட்ட நிலம் வாங்கி போடாம இருக்கீங்க" என்ற குபீர் வசனம். (அதை ஏன் ஒரு பையனுக்கு சொல்லக் கூடாது.)
3 . தன் பெண் குழந்தையை எப்படிப்பட்ட பிள்ளையாக வளர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக, இந்த பெண் குழந்தைக்கு எவ்வோளவு நகை சேர்க்கணும் என்ற கவலை இருப்பதும்.
4 . சேர்த்து வைத்த நகையை அவசரத்துக்கு பேங்கில் கொடிய வட்டிக்கு அடகு வைக்க பெரும் ஆயுதமாக இருப்பதால்.
இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோரும் மேற்படி குடும்பத்தார்களைப் போல் வாழ்ந்து காட்டுவோமாக.
(பைத்துல் மால் நிர்வாகிகளே.....எப்பொழுது ஒரு கோடி வட்டியில்லாக் கடன் திட்டம் வரப் போகிறது)